பெங்களூரு:

ர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வராவின் உதவியாளர் தற்கொலை? செய்துகொண்டது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரமேஸ்வராவின் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரது உதவியாளர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பல்வேறு கேள்வி எழுப்பி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஜேடிஎஸ் ஆட்சியின்போது, துணைமுதல்வராக இருந்தவர் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா. இவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ருத்துவக் கல்லூரி உள்பட 34 இடங்களில்  2 நாள் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையின்போது இதில்,ரூ.4.52 கோடி கைப்பற்றப்பட்டது. மேலும் பரமேஸ்வராவின் உதவியாளர் வீடுகளிலும், முக்கிய நபர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பரமேஸ்வரராவின்  தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இவரது வீடு பெங்களூரு ஞானபாரதி பகுதியில் உள்ளது.

வருமான வரி சோதனையில் ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில்,. பரமேஸ்வரா வின் உதவியாளர் தற்கொலை செய்து உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.