டில்லி:

17வது லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலில் தபால் வாக்கு போட்டி அரசு ஊழியர்களில், சுமார்  5லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் வாக்குள் செல்லுபடியாகாத நிலையில் இருந்ததாகவும், அதனால் அந்த வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இது அரசு ஊழியர்களின் தகுதியின்மையை பறைசாற்றி உள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் கட்சிககளின் சார்பில் போட்டியிட்டவேட்பாளர்கள், அவர்களில் எத்தனை பேர் டெபாசிட்டை இழந்தனர், கட்சிகள் பெற்ற வாக்குகள் விகிதம், தபால் வாக்குகள் எவ்வளவு என்பதை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு வெளியிட்டு உள்ளது.

அதுபோல,  தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 7,484 வேட்பாளர்களில் வெறும் 587 வேட்பாளர்கள் மட்டுமே  டெபாசிட் பெற்றுள்ளனர். மற்ற 6897 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். இது 86% என்றும் கூறியுள்ளது.

இந்தத் தேர்தலில் தபால் வாக்குகள் உட்பட நாடு முழுவதும் 67.4% வாக்குகள் பதிவாகின. இதுவரை நடந்த மக்களவைத் தேர்தல்களிலேயே இதுதான் அதிகமாக பதிவான வாக்கு சதவிகிதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மொத்தம் பதிவான தபால் வாக்குகள்: 28 லட்சம்

தகுதி பெறாத தபால் வாக்குகள்: 5 லட்சம்

இறுதியாக தகுதிப்பெற்ற தபால் வாக்குகள்: 22.8 லட்சம் 

பல்வேறு காரணங்களால் 5 லட்சத்திற்கு மேலான தபால் வாக்குகள் செல்லாத ஓட்டுகளாக நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் தபால் வாக்குகள் செல்லாத ஓட்டுக்களாக நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் ஊழியர்களின் திறமை கேலிக்குறியதாகி உள்ளது.

இந்தத் தகவலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.