கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதி மன்றம் இன்று மீண்டும் விசாரணை

Must read

டில்லி:

ர்நாடக மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதி மன்றம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது. அப்போது,  பரபரப்பு தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில், சபாநாயகர முடிவு எடுக்க தடை விதித்த உச்சநீதி மன்றம், வழக்கை இன்றைக்கு (16ந்தேதி) தள்ளி வைத்திருந்தது. அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இன்றைய தினம் கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த 1 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி முதலில் 10 எம்எல்ஏக்களும் பின்னர் 5 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை  16ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில்  இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில்,  கர்நாடகா சட்டப் பேரவையில் வரும் (18ந்தேதி) வியாழக்கிழமை முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சபாநயகர் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றைய விசாரணையை தொடர்ந்து வழக்கு முடிவுக்கு வரும் என தெரிகிறது.

More articles

Latest article