கர்நாடகா: ஆடம்பர திருமணம் நடத்திய ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்தில் ரெய்டு!

Must read

பெங்களூரு,
ர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க., அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான சுரங்க நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
கர்நாடக முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.650 கோடி செலவில் கடந்த நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
janathanareddy
ஜனார்த்தன ரெட்டி. தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்ட இவர், கடந்த பா.ஜ.க., ஆட்சியின் போது மாநில அமைச்சராக பதவி வகித்தவர். சுரங்க மோசடி வழக்கில் சிக்கி சிறை சென்ற ஜனார்த்தன ரெட்டி, தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
தற்போது ஜாமீனில் இருக்கும்  இவர்,  சில தினங்களுக்கு முன்பு  650 கோடி ரூபாய் செலவில் ,தனது மகள் திருமணத்தை  பெங்களூரில் மகவும் ஆடம்பரமாக நடத்தினார்.
நாடு முழுதும் பணத்தட்டுப்பாடு உள்ள நிலையில், மக்கள் பணத்திற்காக மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், ரூ.650 கோடி செலவில் திருமணம் நடைபெற்றது கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இதையடுத்து, இன்று காலை  ஜனார்த்தன ரெட்டி நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள்  அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனை குறித்த தகவல்கள் எதுவும் முழுவதுமாக இன்னும் வெளியாகவில்லை.
ஜனார்த்தன ரெட்டி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article