பெங்களூரு: பள்ளி, கல்லூரிகளில் மதஅடையாளங்களை காட்டும் ஹிஜாப் அணியக்கூடாது என  கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக  கர்நாடக தலைமை நீதிபதி ரித்துராஜ் தலைமையிலான மூவர் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.
கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பலர் வழக்கு தாக்கல் செய்யனர். இந்த வழக்குகளை  3 நீதிபதிகளை கொண்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது. சுமார் 11 நாட்கள் தொடர் விசாரணைக்கு பிறகு,  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று ஹிஜாப் வழக்கில் 3 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.
இன்று தீர்ப்பு வெளியாவதைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், பெங்களூரு உள்பட பல பகுதிகளில் மக்கள் கூட தடை விதித்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10.30 மணி அளவில் ஹிஜாப் விவகாரம்  குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியது. அப்போது, கல்வி நிலையங்களில்,  ஹிஜாப்-க்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அறிவித்ததுடன்,  ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுதாக கூறியது.
மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டத் தடை தொடரும்  என்றும், ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது நியாயமான கட்டுப்பாடு தான், அனைவரும, அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்திற்கு  உட்பட்டவர்களே  என்று கூறியதுடன், சீருடை சட்டம் – அனைவருக்குமானது, பள்ளிகளில் மத அடையாள ஆடை கூடாது.
 ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் மனுதாரர்களால் முன்வைக்கப்படவில்லை என்று சுட்டிக்காடியதுடன், பள்ளிகளில் மதத்தை அடையாளப் படுத்தும் ஆடைகள் அணிவதை, அனுமதிக்க முடியாது,   அதனால், ஹிஜாப் தடை நியாயமானது தான் என்று கூறியதுடன், இஸ்லாமிய முறைப்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் அல்ல என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.ராஜ் தலைமையிலான  3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது
.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி ஆகியோர் கொண்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு ஹிஜாப் சர்ச்சையில் பரபரப்பு  தீர்ப்பளித்தனர்.