கர்நாடகா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

Must read

பெங்களூரு,

ர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி 50 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாகவே  மீட்கப்பட்டார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று காவேரி என்ற 6 வயது சிறுமி  கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சாஞ்சரவாடி கிராமத்தில் 400அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் அருகே விளையாடும் போது திடீரென ஆழ்துளை கிணற்றின் உள்ளே விழுந்தார்.

இதுகுறித்து உடனடியாக அந்த பகுதி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும்  தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து புனேவில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த சிறுமி  30 அடி ஆழத்தில் சிக்கிகொண்டு உள்ளதை கேமரா மூலம்  உறுதி செய்த மீட்பு குழுவினர் உடடினயாக குழந்தைக்கு தேவையான ஆக்சிஜனை செலுத்தினர்.

தொடர்ந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 50 மணி நேரம் போராடி சிறுமியை மீட்டனர். ஆனால், ஆனால் சிறுமி காவேரி உயிரிழந்த நிலையிலேயே காணப்பட்டார்.

இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 50 மணி நேரம் போராடியும் உயிருடன் மீட்க முடியவில்லையே என ஆதங்கப்பட்டனர்.

More articles

Latest article