பெங்களூரு:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளர். கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி அறிவுறுத்தி உள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாத நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில்,  தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்துவிட உத்தரவிடும்படி, தமிழகம் கோரிக்கை வைத்தது. அதையடுத்து,  தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக, கபினி, கிருஷ்ணசாகர் போன்ற அணைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக,  தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுபடி நடவடிக்கை எடுக்க முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார்.