பெங்களூரு:

ர்நாடகாவில் இன்னும் புதிய மந்திரிகள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாததால், முதல்வர் குமாரசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நடைபெற்று முடிந்த  கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காத தால், தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாளம் ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 23ந்தேதி நடைபெற்ற பதவி எற்பு விழாவில் கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து துணை முதல்வர கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். வேறு அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

அதைத்தொடர்ந்து கடந்த 25ந்தேதி கர்நாடக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, 117 பேர் ஆதரவு முதல்வர் குமாரசாமி கிடைத்தால் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

குமாரசாமி பதவி ஏற்று ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் இன்னும் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட வில்லை. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமைச்சர்கள் மற்றும் துறைகள் பிரிக்கப்படுவதில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் அணிகளுக்கு இடையே கருத்தொற்றுமை வராததாலும், பெரும்பாலோர் அமைச்சர் பதவி கேட்டு கட்சி தலைவர்களை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இதுவரை மாநில அமைச்சர்கள் பட்டியில் ரெடியாகவில்லை என்று கூறப்படுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி இறுதி செய்வார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி வெளிநாடு செல்வதால் கர்நாடக அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகியுள்ளது.

இதன் காரணமாக கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதுபோல மாநில மக்களிடையேயும், அமைச்சர்கள் பதவி ஏற்காதது குறித்து கருத்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.