ண்டன்

ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குழுமத்தை பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும் என இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வேதாந்தா குழுமம் இந்தியாவில் தூத்துக்குடியில் நடத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டம் மாசடைவதாக மக்கள் போராட்டம் நடத்தினர்.  அந்த போராட்டத்தின் 100 ஆவது நாளில் வன்முறை வெடித்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.   அதில் 13 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்தன.  இது உலகெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

வேதாந்தா குழுமத்தின் தலைமை அலுவலகம் இங்கிலாந்து தலைநகரான லண்டனில் அமைதுள்ளது.   இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் கட்சி இது குறித்து, “வேதாந்தா குழுமத்தின் ஆலையை எதிர்த்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.  இதில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.   உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த தொழிற்சாலை நடத்தப்பட்டு வருவது மிகவும் கண்டனத்துக்குறியது.

மக்களிடம் அந்த நிறுவனம் நம்பிக்கையை இழந்துள்ளது.  இவ்வாறு மக்கள் நம்பிக்கையை இழந்த அந்த நிறுவனத்தை பங்கு சந்தையில் செயல்பட அனுமதிக்கக் கூடாது.  உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து நீக்க வேண்டும்” என அறிவித்துள்ளது.