கர்நாடகா : எடியூரப்பா பதவி ஏற்பு தகவலை டிவிட்டரில் இருந்து நீக்கிய பாஜக

பெங்களூரு

ர்நாடகா முதல்வராக நாளை எடியூரப்பா பதவி எற்பதாக பதிந்த தகவலை கர்நாடக பாஜக நீக்கி உள்ளது

கர்நாடக முதல்வராக நாளைக் காலை 9.30 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இதை ஒட்டி கர்நாடக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில்,

கன்னட மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நேரம் வந்து விட்டது.

ஸ்ரீ எடியூரப்ப்பா நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

கர்நாடகத்தின் பொற்காலம் தொடங்கும் நேரம் வந்து விட்டது

என பதிந்திருந்தது.

 

தற்போது இந்தப் பதிவை டிவிட்டரில் இருந்து கர்நாடக பாஜக நீக்கி உள்ளது

Tags: Karnataka BJP removed the post about Yedyurappa's sworn in