உதவி ஆய்வாளர் தேர்வுக்கு லஞ்சம் வாங்கியதாக கர்நாடக ஏ.டி.ஜி.பி. அம்ரித் பவுல் இன்று சி.ஐ.டி.போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் அம்ரித் பவுல் காவலர் தேர்வாணையத்தின் ஏ.டி.ஜி.பி. யாக இருந்த போது பல்வேறு குளறுபடிகள் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது குறித்து சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், காவலர் தேர்வுக்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வு ஓ.எம்.ஆர். ஷீட்டுகளை திருத்தியது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் ஏ.டி.ஜி.பி. அம்ரித் பவுல் 25 பேர்களிடம் தலா 20 லட்சம் என மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அவர் கைது செய்யப்பட்டார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.ஐ.டி. போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்பவம் நடைபெற்ற போது தற்போதய முதல்வர் பசவராஜ் பொம்மை உள்துறை அமைச்சராக இருந்ததால் இந்த குளறுபடியில் அவருக்குள்ள பங்கு குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் அதனால் அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும், பிரதமர் அதை செய்வாரா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.