ரூ.25லட்சம், அமைச்சர் பதவி: எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை வெளியிட்ட குமாரசாமி

Must read

பெங்களூரு:

ர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏவின் மகனிடம் ரூ.25லட்சம், அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தி கூறி  பேரம் பேசும் ஆடியோவை  குமாரசாமி வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாக பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை இழுக்க தங்களது அணிக்கு முயற்சி செய்து வருகிறார்.  அவர்களுக்கு பண ஆசையும், பதவி ஆசையும் காட்டி, ஆட்சியை கவிழ்த்துவிட்டு, பாஜக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

எடியூரப்பாவின் ஆசைக்கு அதிருப்தி காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக கர்நாடக பட்4ட் கூட்டத் தொடரில் ஒருசில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடக அரசுக்கு பெரும்பான்மை இல்லை என கூறி பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தை முடக்கி வருகிறன்றனர்.

குமாரசாமி அரசு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவரது கோரிக்கையை ஏற்று, பெரும்பான்மை நிரூபிக்க தயார் என்று முதல்வர் குமாரசாமியும் கூறி உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜேடிஎஸ் எம்எல்ஏவின் மகனிம் எடியூரப்பா பேரம் பேசும் ஆடியோவை வெளியிட்டு உள்ளர்.

ஜேடிஎஸ் எம்எல்ஏ நாகனகவுடா கந்துர் மகன் ஷரானாவிடம் ரூ.25 லட்சம் உடன் அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி எடியூரப்பாக பேசும் ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.

என்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என்பதற்காக இப்போது இதை அம்பலப்படுத்து கிறேன் என்று கூறிய   குமாரசாமி,  நரேந்திர மோடி, நாட்டையும், அரசியல்வாதிகளையும் குறைசொல்லி பிரசாரம் செய்கிறார், மறுபுறத்தில், தன்னுடைய நண்பர்களை கருப்பு பணத்தின் மூலம் ஜனநாயகத்தை இடித்துத் தள்ளுவதை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஜனநாயகத்தைத் திட்டமிட்டுச் சீர்குலைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளச் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க முயல்வதாகவும்,  இந்தச் செயலில் எடியூரப்பா, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்குத் தொடர்புள்ளதாகவும் கூறினார்.

பிரதமர்  இந்த நாட்டின் ஜனநாயகத்தை இடித்து, மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் அவர்கள் பிரதமரின் உண்மையை அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

More articles

Latest article