சென்னை:

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து வரும் 15 ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2015-ம் மே -6-ம்தேதி ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து  2017 ஜூலை 1-ம்தேதியில் இருந்து ஜி.எஸ்.டி. நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அவ்வப்போதுகூடி வரி விகிதங்களை மாற்றி அமைத்து வந்தது.

இந்த நிலையில்,  ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழக அரசுக்கு கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 31 ஆயிரத்து 350 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொழில்துறை வளர்ச்சிக்காக ரூ.2747 கோடி ஒதுக்கீடு

மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ 1362.27 கோடி ஒதுக்கீடு..

தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள 89 அணைகளில் ரூ. 745.49 கோடி செலவில் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.168.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.