டில்லி

ந்தியவின் புகழ்பெற்ற வீரர் கபில்தேவ் ஒரு முறை மன்கேடிங் முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் இந்திய அணித் தலைவர் கபில்தேவும் ஒருவர் ஆவார். இவர் தலைமையில்கடந்த 1983 ஆம் வருடம் இந்திய அணி உலகக் கோப்பைய வென்றது. இவர் 1994 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்ற சமயத்தில் சிறந்த ஆட்டக்காரர் வரிசையில் முதல் இடத்தில் இருந்தார். இவர் 1999-2000 வருடத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணி புரிந்துள்ளார்

கடந்த 1992-93 ஆம் வருடம் இந்திய அணி கபில் தேவ் தலைமையில் நட்புப் பயணம் என்னும் கிரிக்கெட் பயணத்தை தென் ஆப்ரிக்காவில் நடத்தியது. அந்த பயணத்தின் போது டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நடந்த நட்புப் போட்டியின் ஒருநாள் பந்தய வரிசையில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்துக் கொண்டிருந்தது.

அப்போது தென் ஆப்ரிக்க புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டன் என்பவரின் ஒன்று விட்ட சகோதரர் பீட்டர் கிறிஸ்டன் விளையாடிக் கொண்டிருந்தார். பீட்டருக்கு அதிக டெஸ்ட் விளையாட்டு அனுபவம் இல்லை. ஆகவே அவர் அந்த வரிசையில் நான்கு போட்டிகளில் 76 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டியில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

கபில்தேவ் பந்து வீசும் போது பீட்டர் கிறிஸ்டன் சற்றே கிரீஸை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் அவருக்கு எச்சரிக்கை அளிக்காத கபில்தேவ் அவரை மன்கேடிங் செய்து அவுட் ஆக்கினார். இது மிகவும் சர்ச்சையை உண்டாக்கியது. நட்புப் பயணத்தில் நட்பை மதிக்காமல் கபில்தேவ் நடந்துக் கொண்டார் என அப்போது பத்திரிகைகள் குற்றம் சாட்டின.

https://www.youtube.com/watch?v=8pSPJoWic7A?feature=youtu