ஜெய்ப்பூர்

நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது குறித்த மேலும் விவரம் இதோ

நேற்று ஐபிஎல் போட்டியில் அஸ்வின் பந்து வீசிய போது ஜோஸ் பட்லர் கிரீசை விட்டு சற்றே வெளியில் சென்றுள்ளார். சாதாரணமாக அவ்வாறு செல்லும் போது பவுலர் எச்சரிக்கை அளிப்பது வழக்கம். ஆனால் நேற்று அஸ்வின் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கினார்.

அஸ்வின் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் பவுலிங் செய்து ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கியது குறித்து பலரும் அஸ்வினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அஸ்வின் முதல் தடவையாக மன்கேடிங் முறையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இது போல் செய்துள்ளார்.

கடந்த 2012 வருடம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் வங்கிகள் போட்டியின் போது ஸ்ரீலங்காவின் வீரர் லகிரு திருமன்னே இதே முறையின் அஸ்வினால் அவுட் ஆனார். அவர் ஏற்கனவே இது குறித்து திருமன்னேவை எச்சரித்தார். ஆனால் இந்த அவுட் அம்பயரால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. அதனால் அப்போது இது பெரிதாக பேசப்படவில்லை.