பெய்ஜிங்:

அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய வரைபடத்தில் சேர்த்து உலக நாடுகள் வெளியிட்ட 30 ஆயிரம் வரைபடங்களை சீனா அழித்துள்ளது.


இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தைவான் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம் இடம்பெற்ற உலக நாடுகளின் 30 ஆயிரம் வரைபடங்களை சீன சுங்கத்துறை அதிகாரிகள் அழித்தனர்.

இந்த வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலம் இந்தியாவில் இருப்பதையும், தைவானை ஒரு நாடாக குறிப்பிட்டிருப்பதையும் தவறு என தொடர்ந்து சீனா எதிர்த்து வருகிறது.

தெற்கு தீபெத்தின் ஒரு பகுதிதான் அருணாச்சலப் பிரதேசம் என்று சீனா கூறிவருகிறது. மேலும் இந்த மாநிலத்துக்கு இந்திய தலைவர்கள் செல்வதற்கும் சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

3488 கி.மீ தொலைவு வரையிலான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண, இந்தியாவும், பாகிஸ்தானும் 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.