நியூயார்க்:

சூடான டீ குடித்தால் உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


சூடாக டீ குடிப்பதை பெரும்பாலோர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படி சூடாக டீ குடிப்பதற்கும் உணவுக் குழாய் புற்றுநோய் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக புற்றுநோய் குறித்த சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்கன் கேன்சர் சொஸைட்டியின் இயக்குனர் டாக்டர் ஃபர்ஹாத் இஸ்லாமி கூறும்போது, “இதற்கு முன்பு வெளியான ஆய்விலும், சூடான டீ குடித்தால் உணவுக்குழாய் புற்றுநோய் வரும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நாங்கள் அதனை சோதனை செய்து உறுதி செய்துள்ளோம். சூடான டீயின் வெப்பநிலையை வைத்து ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளோம்.

ஈரானில் 50 ஆயிரம் பேரிடம் நடத்திய சோதனையில், சூடான டீ குடித்தால் உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படும் என்பது உறுதியானது.

2004-2007 ஆண்டுகளில் 317 பேருக்கு சூடான டீ குடிப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய் வருவது உறுதி செய்யப்பட்டது” என்றார்.