கான்பூர் ரெயில் விபத்து: தந்தையை காணாமல் தவிக்கும் இளம்பெண்….

Must read

கான்பூர்,
நேற்று அதிகாலை நடைபெற்ற ரெயில் விபத்தில் தந்தையா காணாமல் இளம்பெண் ஒருவர் தவித்து வருகிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே நேற்று அதிகாலை இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்த ரெயில் தடம்புரண்டபோது பெட்டியில் இருந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இறந்து விட்டார்களா,   எங்கு மாட்டிக்கொண்டனர் என்பது தெரியாமல்,  உடன் பயணித்தவர்களை காண முடியாது உயிர்பிழைத்த பயணிகள் தவித்து வருகின்றனர்.
இந்த ரெயிலில்  இளம்பெண்  ரூபி குப்தா என்பவர் குடும்பத்தினரும் பயணம் செய்துள்ளனர். ரூபிக்கு வரும் டிசம்பவர் 1ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
kanpurt1
திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, ரூபி தனது தந்தை மற்றும் சகோதரிகளுடன் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ஆனால், துரதிருஷ்டவசமாக ரெயில் விபத்துக்குள்ளானதில் ரூபி குடும்பத்தினரும் விபத்தில் சிக்கினர்.
ரூபிக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரது சகோதரிகளுக்ளுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த விபத்தில் அவரது தந்தையை காணவில்லை. அவருக்கு விபத்து ஏற்பட்டு ஏதேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்ற விவரமும் தெரியவில்லை.
இந்த விபத்தில் ரூபி, தனது  திருமணத்திற்கு வாங்கிசென்ற பொருட்கள் அனைத்தையும் இழந்துவிட்டார். தற்போது தனது தந்தை எங்கிருக்கிறார் என்று பரிதவிப்புடன் தேடிவருகிறார்.
இதுகுறித்து ரூபி கூறியதாவது.
“என்னுடைய தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை, நான் எல்லா பகுதியிலும் தேடிவிட்டேன். சிலர் மருத்துவமனைகளில் தேடும்படி கூறுகிறார்கள், என்ன செய்வது? என்று தெரியாமல் இருக்கிறேன்.
என்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் எனது தந்தை எனக்கு வேண்டும் என்று கதறி அழுதது அங்கிருந்தவர்களை மேலும் பரிதாபம் அடைய செய்தது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article