அமேசான் ப்ரைமில் வெளியாகும் கார்த்திக் ராஜூவின் 'கண்ணாடி'….!

Must read


கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஆன்யா சிங் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘கண்ணாடி’ .
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் தமிழில் பைனான்ஸ் சிக்கலால் வெளியாகவில்லை. தெலுங்கில் ‘Ninu Veedani Needanu Nene’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் முதலிலேயே அமேசான் தளத்துக்கு டிஜிட்டல் வெளியீடு உரிமை விற்கப்பட்டு இருந்தது. ஆனால், படம் வெளியாகாததால் டிஜிட்டலிலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது நேரடியாக இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மாதம் இறுதியில் அமேசானில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article