சென்னை:  கவியரசு கண்ணதாசன்   99ஆவது பிறந்த நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.   அவரது திருவுருவச்சிலைக்கு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த படத்தை இணைத்து முதலமைச்சர் ஸ்டாலின்   வெளியிட்டுள்ள பதிவில், “மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலைப் படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்!”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு, கவியரசு கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாளையொட்டி  அவரது  திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில்  அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அதன்படி சென்னையில் உள்ள கவிஞர் கண்ணதான சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்பட கட்சியினரும், அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி! கவிஞர் கண்ணதான் பிறந்த நாள்…

கண்ணதாசன் 99வது பிறந்த நாள்: நாளை அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை….