சென்னை: போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு, என மத்திய பாஜக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை விட 22 மடங்கு அதிக நிதி சமஸ்கிருதத்துக்கு மத்தியஅரசு ஒதுக்கி இருப்பது, ஆர்டிஐ தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது. இதற்கு தமிழ்க அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், அதுதொடர்பாக வெளியாக ஆங்கில பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,  போலிப் பாசம் தமிழுக்கு, பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! சமஸ்கிருதத்திற்கு கோடிகள் கிடைக்கும்; தமிழுக்கும் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் முதலைக் கண்ணீரைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது என விமர்சித்து உள்ளார்.

சமஸ்கிருத மொழியை விட தமிழ் மொழிக்கு 22 மடங்கு குறைவான நிதி! மோடி அரசின் “மாற்றாந்தாய் மனப்பான்மை”