ண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமானவர் சேது. தொடர்ந்து 50 50, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா படங்களில் நடித்துள்ளார். சேது, உமையாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். சேது மனைவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். சில மாதங்களுக்கு முன் சேது திடீர் மாரடைப்பில் மரணம் அடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சேது, நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். அவர் சேதுவின் மறைவை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுததுடன் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்து சுடுகாட்டுக்கு உடலை சுமந்து சென்றார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பமாக இருந்த சேது மனைவிக்கு பிரசவலி ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் சேர்ந் தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சேது மறுபடியும் பிறந்திருப்பதாக கூறி பூரிப்படைந்தனர்.