சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு : கனிமொழி

Must read

சென்னை

லைநகர் சென்னையில் மழைநீர் தேங்காமலிருக்க விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என திமுக மகளிரணி செயலர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி உள்ளது.   நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.   மழைநீரை அகற்றும் பணி தீவிரமாக நடந்த வருகிறது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

தியாகராய நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.  இதை திமுக மகளிரணி செயலரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தொடங்கி வைத்தார்.  அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் கனிமொழி,

“நீண்டகாலமாக சென்னையில் மழை நீர் வெள்ளம் போலத் தேங்கி, காட்சி அளிக்கும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம்  நீர் வழிப் பாதைகளை மறித்து வீடுகள் மற்றும் கட்டடங்கள் கட்டியதே ஆகும்.  விரைவில். இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்னவானது என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்; ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

விரைவில் சென்னை கொளத்தூரில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இத்தகைய மழைக் காலத்தில், மக்களுக்கு உதவாமல் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை இதிலும் அரசியல் செய்து வருகிறார்.”

எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article