‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா ஒப்பந்தம்…!‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கனிகா ஒப்பந்தம்

Must read

விஜய் சேதுபதியின் 33வது படமான யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தை லாபம் பட உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார் .

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்தில் மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன் ராஜா உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதி நடித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து கனிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

More articles

Latest article