சில நாட்களுக்கு முன்பு ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ’ பாடலுக்கு கமல் மாதிரியே நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் நடிகர் அஸ்வின் குமார்.

ட்ரெட்மில் ஒடிக் கொண்டிருக்கும்போது, அதன் மீது நடனமாடியிருந்தார். இவரது ட்ரெட்மில் நடனம் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.

தற்போது இவரது நடனத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டியுள்ளார்.

“நான் செய்த நல்வினைகள் என் ரசிகரைச் சென்றடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!”.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.