சுப. வீரபாண்டியனை வாழ்த்திய கமல்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ‘கீழடி-ஆய்வு கருத்தரங்கம்’ நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை நடத்திய சுப.வீரபாண்டியனை டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார் கமல்.

அதில், ‘தோழர் சுப.வீரபாண்டியன் நடத்தும் இம்மாலை நிகழ்ச்சி வெற்றியின் முதற்படி. தமிழனின் பெருமை கீழடியில் கிடப்பதை அனுமதியாத இவ்வறப்போர் தொடரும்’, என பதிவிட்டுள்ளார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் ‘கீழடி-ஆய்வுக் கருத்தரங்கம்’ சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமை வகித்தார். தொல்லியல் ஆய்வாளர் மதுரை சொ.சாந்தலிங்கம் மற்றும் எழுத்தாளரும், த.மு.எ.க.ச செயலாளர் சு.வெங்கடேசன் ஏராளமான தொல்பொருள் ஆய்வாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவுக்கு கமல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

 


English Summary
Kamal who praised Veerapandian for Kiladi research