ஒரு வரி இரங்கல்; சர்ச்சையில் கமல்..!

Must read

kamal-jayalalithaa
ஒட்டுமொத்த தமிழகமே முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை நினைத்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறது. இவரது பூத உடல் ராஜாஜி ஹாலில் வைத்து அதிமுக தொண்டர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் உலகநாயகன் நடிகர் கமல் ஹாசன் அமெரிக்காவில் இருப்பதாகவும் இதனால்தான் அவரால் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது, இந்த தகவல் வெளியான சிறிது நேரத்திலேயே கமல் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டார். அது அதிமுகவினர் மற்றும் சினிமா பிரபலங்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பதிவிட்ட செய்தி இதுதான் ”சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என சுருக்கமாக ட்வீட் போட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இயக்குனர், பாடகர் எல்லாம் இறந்தபோது தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த கமல், முதல்வரின் இழப்புக்கு ஒரேவரியில் ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article