படப்பிடிப்பை கேன்சல்; சென்னை வந்தார் அஜித்

Must read

ajith-back-to-chennai
பல ஆண்டுகளாகவே அனைவருக்கும் இருக்கும் சந்தேகம் அஜித்துக்கு எந்த கட்சி பிடிக்கும் என்பதுதான். பல நேரங்களில் அவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் அமர்வது உறுதி என செய்திகள் வெளியானாலும், அதை பற்றி கண்டுகொள்ளாலம் தன் வேலையை பார்த்து வந்தார் அஜித். ஆனால் இன்று அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் மறைவு இவரை பெரிதும் பாதித்துவிட்டது என பல்கேரியாவிலிருந்து ஒரு பத்திரிக்கை செய்தியை அனுப்பியிருந்தார்.
சிவா- அஜித் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுடன் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.. திடீரென என்ன நினைத்தாரோ உடனே விமானம் பிடித்து சென்னை வந்து இறங்கிவிட்டாராம் அஜித்.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு மாலை 6 மணிக்குள் முடிந்துவிடும் என்று தெரியப்படுத்துவதற்குள், அஜித் விமானத்தில் ஏறிவிட்டாராம். இதனால், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. வீடு திரும்பியிருக்கும் அஜித் நாளை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் மறைவு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article