சென்னை,

மிழகத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக கூறி உள்ள கமல், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு 3 மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி, கட்சி தொடங்க ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்நிலையில், கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சி தொடங்க ரூ.30 கோடியை தொண்டர்களிடம் கேட்ட ஒரே நபர் கமல்தான் என்று கூறினார்.

சமீபத்தில், வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கமல்,  நான் தனிக்கட்சி தொடங்குவது பற்றி பல்வேறு தலைவர்கள், பெரியவர்கள், அறிவாளிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும்,  நிச்சயம் அரசியல் கட்சி தொடங்குவேன். எந்த கட்சியுடனும் கூட்டணி சேர மாட்டேன் என்றும்,  என்னுடைய கட்சியில் இளைஞர்க ளுக்கும், புதியவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

மேலும்,  நான் தொடங்கும் கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி போல பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படும் என்றும் கூறியிருந்தார்.

சென்னையில் வெள்ளம்பாதித்த மூலக்கொத்தளம் பகுதியில் ஆய்வு நடத்தி  அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்ர்.  அப்போது கமல் குறித்த கேள்விக்கு, முதலில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அன்று எம்ஜிஆர், நேற்று ஜெயலலிதா, இன்று இரட்டை இலை ஆகியவற்றின் பக்கத்தில் மக்கள் உள்ளனர் என்றார்.

மேலும்,  உலகத்திலேயே கட்சி தொடங்க ரூ.30 கோடியை தொண்டர்களிடம் கேட்ட ஒரே நபர் கமல்தான். அதென்ன கணக்கு ரூ.30 கோடி என்று எனக்கு புரியவில்லை. இதுவரை யாரும் கட்சி தொடங்குவதற்கு தொண்டர்களிடம் பணம் கேட்டதில்லை என்றும் அவர் கூறினார்.