லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் விக்ரம்.

கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் ஜூன் 3 ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

வித்தியாசமாக ரயில் பெட்டிகளில் டிஜிட்டல் விளம்பர போஸ்டர்கள் மூலம் இந்தப் படத்தின் ப்ரோமோ மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் மே மாதம் 15 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.