சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப் பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் சென்னை உள்பட பல மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின்  பட்டியலை வெளியிட்டு “இவர்கள் உங்களுள் ஒருவர்;வெற்றி பெறச் செய்யுங்கள்” என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி  சார்பில் ஏற்கனவே 5 கட்ட  வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ள நிலையில், இன்று  6-வது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். இன்றைய பட்டியலில், சென்னை, ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி, திருப்பூர், சேலம், மதுரை மாநகராட்சிகளிலும், திருவண்ணாமலை, திருக்கோவிலு,,பொள்ளாச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் பேருராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள கமல்,  “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை வெளியிடுகிறேன். இவர்கள் உங்களுள் ஒருவர் என்பதும் உங்களுக்கான ஒருவர் என்பதும் இவர்களின் தனித்தகுதிகள். தகுதி மிக்க இவர்களை வெற்றி பெறச் செய்வது உங்கள் கடமை”, என்று தெரிவித்துள்ளார்.

6வது கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்:

5வது கட்ட வேட்பாளர் பட்டியல் விவரம்: