சென்னை: திமுக ஆதரவில் எம்.பி. பதவி பெற்ற மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

திமுக ஆதரவில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன், இந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து, முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்த நிலையில்,  தற்போது  சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து  பிரச்​சா​ரத்தை மேற்கொள்கிறார்.

அதன்படி, இன்று சென்​னை​யில் இன்று  தேர்தல் பிரசாரத்தை தொடங்​கு​கிறார். அதன்​படி, இன்று (17-ம் தேதி) அவர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிடும் கொளத்​தூர் தொகு​தி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் போட்​டி​யிடும் சேப்​பாக்​கம்​-​திரு​வல்​லிக்​கேணி தொகுதி மற்​றும் துறை​முகம், திருவிக நகர், வில்​லி​வாக்​கம் ஆகிய தொகு​தி​களில் வாக்கு சேகரிக்​கிறார்.

இதையடுதது,  நாளை (18-ம் தேதி), தி.நகர், மயி​லாப்​பூர், வேளச்​சேரி ஆகிய தொகு​தி​களிலும், 19-ம் தேதி அவி​நாசி, கோவை தெற்கிலும், 20-ம் தேதி திருச்சி கிழக்​கு, ரங்​கம், லால்​குடி ஆகிய தொகு​தி​களி​லும் வாக்கு சேகரிக்​கிறார்.

[youtube-feed feed=1]