நீட் பற்றி தெரியாத கமல், சூர்யாவின் கட்டுரையை படிக்க வேண்டும்

Must read

கமல் – சூர்யா

பொதுவாக நடிகர் கமல்ஹாசன் மீது, “அறிவார்ந்தவர்” என்ற ஒரு முத்திரை உண்டு. திரைத்துறையின் நவீன அம்சங்களை பயன்படுத்திக்கொள்வதில் முன்னோடி அவர்தான். அது மட்டுமல்ல… புதிய திரைப்படங்களை நேரடியாக டி.வி.யில் திரையிடவும் திட்டமிட்டவர் அவர். அவரது அந்த முயற்சி வெற்றி பெறாவிட்டாலும், முன்னோக்கி பாயும் அவரது திரை அறிவு அனைவரையும் வியக்கவைத்தது உண்மை.

இந்த நிலையில், சமீப காலமாக, தமிழக ஆட்சியாளர்களைக் கண்டித்து அவ்வப்போது தனது ட்விட்டப் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது மிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நீட் குழப்படி, தண்ணீர் பிரச்சினை, விவசாயம் பொய்த்துப் போனது, , ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களால் டெல்டா மாவட்டங்கள் சுடுகாடாகும் அபாயம் போன்றவை.

இந்தப் பிரச்சினைகளுக்காக தன்னெழுச்சியாக மக்கள் ஆங்காங்கே போராடினாலும், ஒரு தகுந்த தலைமை இல்லாததால் போராட்டங்கள் வீரியம் பெறாத நிலை.

இந்த நிலையில்தான் கமல் ஹாஸன், ட்விட்டரில் அரசியல் பேச ஆரம்பித்தார். ஆனால் குறிப்பிட்ட விவகாரங்கள் பற்றி பேசாமல் பொத்தாம் பொதுவாக தமிழக ஆட்சியாளர்களை விமர்சித்து வந்தார். பிறகு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அதற்கு ஆதாரங்கள் கேட்கப்ட்டதும்,  கமல் எந்த ஆதாரமும் தரவில்லை. அதற்கு பதிலாக ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று தன் ரசிகர்களிடம்  தெரிவித்தார்.

இந்த நிலையில் நீட் தேர்வு குறித்தும் ட்விட்டினார் கமல். அதில், “ பள்ளிப் படிப்பை முடிக்காத தனக்கு  நீட்”டின் கொடுமை புரியவில்லை என்று கூறினார். மேலும், தனது மகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்ததால், அதன் கொடுமை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், டெங்குவை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டு விலகுங்கள் என்றும் கமல்ஹாசன் காட்டமாக விமர்சித்தார்.

 

இந்த சூழலில்தான் நீட் குழப்படிகளால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து தான் பங்குபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், “நீட் தேர்வை விலக்கியே தீர வேணடும். ஆனால் எனக்கு இது குறித்து தெரியாது. கல்வி கற்ற பெருமக்கள் விளக்க வேண்டும். நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள். செய்கிறேன்” என்றார் கமல்.

இந்த நிலையில், நெட்டிசன்கள் பலர், “நீட் குறித்த விபரங்கள் தனக்குத் தெரியாது என்று கமல் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இன்று நீட் குறித்து நடிகர் சூர்யா, தி இந்து (தமிழ்) நாளேட்டில் எழுதியிருக்கிறார்.

ஏறத்தாழ நீட் பிரச்சினையின் அனைத்துப் புள்ளிகளையும் திறமையான உள்ளடக்கத்தின் மூலம் இணைத்திருக்கும் கட்டுரை இது.

நீட் குறித்து தெரியாத கமல், நேரம் ஒதுக்கி இக்கட்டுரையை அவசியம் வாசிக்க வேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த கட்டுரை:

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! : நடிகர் சூர்யா

 

 

More articles

Latest article