‘நீட்’ போராட்டத்துக்கு தடை வருமா? உச்சநீதி மன்றத்தில் வழக்கு!

Must read

டில்லி,

மிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நீட் காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக போராடக்கூடாது, மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில்  நீதி விசாரணை செய்ய  வேண்டும் என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், உச்சநீதிமன்றம், இந்த வழக்கை  அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும்,  அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய தேவை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் நேற்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அதில்,   அரசியல் காரணங்களுக்காக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் மாணவர்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.

இது போன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்று கருத முடிகிறது.

எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

More articles

Latest article