சென்னை,

மிழகத்தில் வாகன ஓட்டிகள் இன்றுமுதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளார்கள்.

மேலும், அசல் உரிமம் தொலைந்துவிட்டாலோ, திருடப்பட்டாலோ மீண்டும் உரிமம் வாங்க மிகவும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக டிஜிட்டல் முறையில் லைசென்ஸ் காண்பிக்க அரசு அனுமதிக்குமா என கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவை,  டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற எடுத்துவரும் முயற்சியின் காரணமாக,   காகிதச்சுமையை  மேலும் குறைக்கும் வகையில், டிஜி லாக்கர் என்ற மேகக்கணினியின் மூலம் வலைதளத்தில் சேமித்து வைக்கும் வாய்ப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த டிஜிலாக்கரில்  டிரைவிங் லைசென்சையும் பதிவேற்றி, அதை மொபைல் ஆப் மூலம் போலீசாருக்கு காண்பிக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

தற்போது நாடு முழுவதும் ஏராளமானோர்  டிஜி லாக்கர் சேவையை பயன்படுத்தி, தங்களது படிப்பு சான்றிதழ்கள், சொந்து ஆவணங்கள் போன்றவற்றை  ஸ்கேன் செய்து டிஜி லாக்கரில் சேமித்து வைத்து  பாதுகாத்து வருகின்றனர்.

இதுபோல வாகன பதிவு ஆவணங்கள், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் மற்றும் வாகன ஓட்டுனர் லைசென்ஸ் போன்றவற்றை டிஜிட்டல் பார்மட்டில் டிஜி லாக்கரில் சேமித்து வைத்துக்கொண் டால், அதற்கான மொபைல் ஆப்  மூலம், தங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும்  வாகனம் பதிவு ஆவணங்களை நேரடியாக போலீசார் கேட்கும்போது காண்பிக்க  முடியும்.

இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஆனால், இதுபோன்றை சேவையை பயன்படுத்த ஆட்சியாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்த முன்வருவதில்லை.

நாட்டின் வளர்ச்சி ‘டிஜிட்டல் இந்தியா’ வாயிலாக வேகமாக  முன்னேறி செல்லும் நிலையில் இன்னும் கைகளில் காகிதங்களை  வைத்துக்கொண்டு செல்வது சரியாகாது என்ற கருத்து நிலவி வருகிறது.

தற்போது ஒவ்வொரு குடிமகனின் கையிலும் மொபைல் போனும்,  இன்டர்நெட் கனெக்ஷனும் அத்தியாவசமாகி உள்ள நிலையில், இன்னும் ஒரிஜினல் உரிமத்தை கையில் வைத்துக்கொண்டு, போலீசாரிடம் காண்பிக்க கூறுவது சரியல்ல என்று நகரங்களில் வசிக்கும் படித்தவர்கள் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் டிஜிட்டல் லைசென்ஸ்-ஐ காண்பிக்கலாம் என்று அரசு அறிவித்தால், நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது டிரைவிங் லைசென்சின் டிஜிட்டல் பார்மட்டை தங்களது மொபைல் ஆப் மூலம் உடடினயாக காண்பிக்க முடியும், அதே வேளையில்,  வாகன ஓட்டிகள் காண்பிக்கும் ஓட்டுனர் உரிமம் உண்மையானதுதான் என்பதையும் அதிகாரிகள் உடடினயாக சரிபார்க்க முடியும்.

ஆனால், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வாய்ப்பை பயன்படுத்த பொதுமக்களும், போலீஸ் அதிகாரிகளும் தயாராக இல்லை.

தற்போது பல மாநிங்களில்  ஸ்மார்ட் லைசென்ஸ் வந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இன்னும் ஒரிஜினல் லைசென்சை காட்ட சொல்லி காவல்துறையினர் கூறுவது, நமது காவல்துறை இன்னும் டிஜிட்டல் மயத்துக்கு மாறவில்லை என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது.