ராஜேஷ்.எம் இயக்கத்தில் , ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் , சிவகார்த்திகேயன் – நயன்தாரா இணைந்து நடித்து உருவாகி வரும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்திலிருந்து டக்குனு டக்கனு என்கிற பாடல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது கலக்கலு என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாட, கே.ஆர்.தரண் இந்த பாடலை எழுதியுள்ளார்.

இந்த படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளை மேற் கொண்டுள்ளார் .