17.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ப்ரீமியர்…!

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ (Game of Thrones – GOT) ஆங்கிலத் தொடரின் 8ஆவது சீசனின் முதல் எபிசோட் சமீபத்தில் இந்தியாவில் வெளியாகியது.

வெஸ்டரோஸ் எனப்படும் நிலப்பரப்பில் இருக்கும் 7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் போர் தான் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் மையக்கரு.1991ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய A Song of Ice and Fire என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டதே ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர்.

இதன் முதல் பகுதியை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் மூலமாக ஒரே நேரத்தில் 17.4 மில்லியன் மக்கள் கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன், ஏழாவது சீசனின் கடைசிப் பகுதியை 16.9 மில்லியன் மக்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது.

இன்னும் இந்தத் தொடரில் மொத்தம் 5 பகுதிகளே மிச்சமுள்ளன. இந்த 5 பகுதிகளும் சராசரி 80 நிமிடங்கள் வரை ஓடும் என்று தெரிகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Game of Thrones, season 8
-=-