‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து தனிஷ்க் நிறுவனத்தின் உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி கூறுகையில் நயன்தாரா வருகை எங்கள் பயணத்தை மேலும் சிறப்பாக்குவதுடன், எங்கள் பிராண்டுக்கு மிகவும் பொருத்தமான, நேர்த்தியான வசீகரத்தையும், ஆரவார வரவேற்பையும் பெற்று தருவார் என கூறியுள்ளார்.

மேலும் நயன்தாரா கூறுகையில் :- தனிஷ்க் மக்கள் மனதில் இடம்பிடித்த பிராண்ட் . அந்த பிராண்டின் ஒரு அங்கமாக நான் இருப்பதில் பெருமை அடைகிறேன் என கூறியுள்ளார்.

அட்சய திரிதியை முதல் இந்த விளம்பரங்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.