உலகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. படம் வெளியாகவிருக்கிறது .

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியாக போகிறது .

இதன் தமிழ் வெர்ஷனில் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியிருக்கிறார். விஜய்சேதுபதியும் ஆண்ட்ரியாவும் பின்னணி பேசியிருக்கிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அயர்ன் மேன் கேரக்டருக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மார்வெல் ஆன்தம் என்ற பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஜோ ரஸ்ஸோ ஆகியோர் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் டிவி ஸ்பாட் தற்போது வெளியாகியுள்ளது.