நெட்டிசன்:
கைச்சுவை மேதை, கலைவாணர் இடம், பொருள் அறிந்து பேசக்கூடியவர்.
ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசும் போது எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படி “மை” தொட்டு எழுத வேண்டும் என்பதை அரு”மை”யாக விளக்கியுள்ளார்.
ki
“சிலர் பெரு”மை”யில் எழுதுகின்றார்கள்.வேறு சிலர் பொறா”மை”யில்  எழுதுகின்றார்கள்.சிலர் தற்பெரு”மை”யைத் தொட்டு எழுதுகின்றார்கள்.
இதெல்லாம்கூட பரவாயில்லை… தொடவேக்கூடாத சில மைகள் இருக்கின்றன. அவை… மடை”மை”,  கய”மை”,  பொய்”மை”, வேற்று”மை”. ஆகியவை.
அதேநேரம் நன்”மை” தரக்கூடிய செம்”மை”, நேர்”மை”, புது”மை”
ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் மனதை தொடும்படியாக எழுத வேண்டும்.
இப்படி எழுதினால், வறு”மை”, ஏழ்”மை”, கல்லா”மை”, மடை”மை”, அறியா”மை” ஆகியவற்றை சமூகத்தில் இருந்து நீக்கலாம்.  இந்த நோக்கத்தையே எழுத்தாளர்கள் கட”மை”யாகவும், உரி”மை”யாகவும் கொள்ள வேண்டும்” என்று பேசி முடித்தார் கலைவாணர்.
“ஆகா.. அருமை!” என்று சொல்லத்தோன்றுகிறதல்லவா?
(வாட்ஸ்அப் பதிவு..)