நெட்டிசன்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நல பாதிப்பு காரணமா, சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், அதே நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாளை அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதா முழு உடல் நலம் பெற அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள CM அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.