சகாயம் ஐ.ஏ.எஸின் “மக்கள் பாதை” அமைப்பை  ஏமாற்றும் நபர்கள்! தங்கர்பச்சான் எச்சரிக்கை!

Must read

காயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலில் “மக்கள் பாதை” என்னும் அமைப்பு, “மக்கள் மருந்தகம் “ ஒன்றை திறந்துள்ளது. இதில் மலிவு விலையில் தரமான மருந்துகள் விற்கப்படுகிறது.  தமிழகத்தில் எங்கிருந்தபடியும் இந்த மருந்தகத்தைத் தொடர்புகொண்டு, தங்களுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை பெறலாம்.
இதன் வாட்ஸ்அப் எண், மெயில் ஐடி, போன் எண்களை சமூக வலைதளங்களில் பதிந்திருக்கிறார்கள். இதில் சிலர், தங்களது செல் எண்கள், வங்கி கணக்கு எண்களை சேர்த்து பதிவிட்டு வருகிறார்கள்.
இதனால் மக்கள் ஏமாறும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து பிரபல திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான், தனது பக்கத்தில் எச்சரிக்கை பதிவு எழுதியிருக்கிறார்.

சகாயம், தங்கர்பச்சான்
சகாயம், தங்கர்பச்சான்

“ஒரு திருத்தம்” என்ற தலைப்பிலான அந்த பதிவு:
“ “Now We Opened Our First GENERIC MEDICAL SHOP in TamilNadu”
திரு.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும்
“மக்கள் பாதை” நண்பர்கள் இணைந்து தமிழக மக்களுக்கு உண்ணத நோக்கத்துடன் தரமான மருந்துகள் மிக குறைந்த விலையில் மத்திய அரசு அனுமதியுடன் சிவகங்கையில் முதல் JAN AUSHADHI MEDICAL STORE ( மக்கள் மருந்தகம்) Generic Medical Shop துவங்கியுள்ளது.  இதை தமிழக மக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.   மருத்துவரின் ஆலோசனையுடன் தங்களின் மருந்து பெயருடன் வாட்ஸ் அப்(9788052839)அல்லது svgjanaushadhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் . நாங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம். அனைத்து வகையான ஆங்கில மருந்துகளும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
உதாரணமாக,  இதய நோயாளிகளுக்கு மாதம் ரூ.1500 மருந்து வாங்குபவர்களுக்கு, “மக்கள் பாதை”யின் மக்கள் மருந்தகத்தில்  ரூ:150 மட்டுமே ஆகும்..
“மக்கள் மருந்தகம் ” தொடர்பான அறிவிப்பை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்துள்ளனர். ஆனால் சிலர்   அந்த பதிவை எடிட் செய்து தங்களின் தொலைபேசி எண்களையும், வங்கிக்கணக்கையும் கொடுத்து பணம் போடச்சொல்கிறார்கள் எனும் சேதி வருகிறது.
மருந்து வேண்டுவோர் கீழ்க்கண்ட இருவரையும், மேலே குறிப்பிட்டுள்ள  மெயில் முகவரியையும் மட்டும் தொடர்புகொள்ளவும்.
திரு.கண்ணன் – 9788052839
சிவகங்கை மக்கள் பாதை
உமர் முக்தார்: 9367777700
மாநில துணை,  ஒருங்கிணைப்பாளர் களப்பணி
 
– இவ்வாறு தனது பதிவில் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
 

More articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article