க்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் போலி பேஸ் புக் பக்கங்களை முடக்கி வரும் பேஸ்புக் நிறுவனம், கலைஞர் செய்திகள் பேஸ்புக் பக்கத்தையும் முடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் போலியான பெயரில் கணக்குகள் தொடங்கி, அரசியல் கட்சிகளை மீது சேறுவாரி பூசும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், தேவையற்ற பதிவுகளை அகற்றவோ, அநத கணக்கை முடக்கவோ வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிறுவனங்களிடம் வலியறுத்தி இருந்தது.

இந்த நிலையில், பேஸபுக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்போலியான கணக்குகளை முடக்க தனது அலவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, பேஸ்புக்கில் தேவையற்ற பதிவுகள் பதிவிடும் பேஸ்புக் கணக்குகளை முடக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குழுவினர் தினசரி லட்சக்கணக்கான பேஸ்புக் கணக்குகளை முடக்கி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து அவதூறாக செய்திகள்  பதிவிட்டதற்காக கலைஞர் செய்திகள் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.