டெல்லி: டெல்லியில் நடைபெற்ற 50வது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு  காவிரி ஆணையம்  ஆணையிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, காவிரி பிரச்சினையை   காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்  கண்காணித்து வருகிறது., காவிரி நதிநீரை கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2018ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக அவ்வப்போது ஆணையம் கூடி, மாநிலங்களின் கருத்துக்களை கேட்டு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதுவரை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் 49 முறை நடைபெற்றுள்ள நலையில், எப்ரல 29ந்தேதி அன்று   50வது கூட்டம்  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில்  டெல்லியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பாக ஆணைய உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவு தலைவர் ரா.சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கர்நாடகத்தின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கலந்துகொள்ளவில்லை, அவருக்கு பதிலாக அவரின் பிரதிநிதி கலந்து கொண்டார். கூட்டத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்து, நீர் இருப்பு, வெளியேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு சார்பாக உறுப்பினர், 28ம் தேதியின்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 42.397 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1,503 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்துவிடப்படுகிறது.

நடப்பு நீர்பாசன 2025-26 ஆண்டின்படி கடந்த 2025 ஜூன் 1ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 27ம் தேதி வரை பில்லிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 174.500 டி.எம்.சிக்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப்பெற்ற நீரின் அளவு 326.945 டி.எம்.சி. ஆகும். இதனை சுட்டிக்காட்டி, கர்நாடக உறுப்பினர், கர்நாடகம் அளித்துள்ள மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது. அதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், கர்நாடகம் அதன் நீர்த்தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தமிழக உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டது.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய சுற்றுச்சூழல் நீர் அளவான மாதத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் வீதம் உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகா பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம், மே மாத பங்கீடாக காவிர ஆற்றில் 2.5 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]