சென்னை: சித்ரா பவுர்ணமி இன்று இரவு முதல் நாளை இரவு வரை உள்ள நிலையில், இன்று இரவு முதல் விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து மே 1,2,3 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (061469), அதேநாள் அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), மே 1,2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண்.06130), அதேநாள் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து மேற்கண்ட தேதிகளில் மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06129), அதேநாள் மதியம் 1.45 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
விழுப்புரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), மே 1,2 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06099), மறுநாள் அதிகாலை 1.50 மணிக்கு காட்பாடி சென்றடையும்.
மறுமார்க்கமாக, காட்பாடியில் இருந்து மே 1,2,3 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06100), அதேநாள் அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
விழுப்புரத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை), மே 1,2 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06145), அதேநாள் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து மே 1,2,3 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (061469), அதேநாள் அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]