ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996ல் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப்படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, போமன் இரானி, சித்தார்த் , விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.