கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் துவங்க உள்ளது.

உத்தரகண்ட் சுற்றுலாத் துறை சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தின் போது வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புதிய, சுருக்கப்பட்ட பாதையின் வரைபடத்தை வழங்கியது.

இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதை அடுத்து 2019ம் இந்த யாத்திரை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த யாத்திரை துவக்கப்படாமலேயே இருந்தது.

இந்த யாத்திரையை மீண்டும் துவங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு முன் 24 நாட்கள் ஆன நிலையில் தற்போது 10 – 15 நாட்களில் இந்த பயணம் முடியும் வகையில் மாற்று வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் கடல்மட்டத்தில் இருந்து 21,778 அடி உயரத்தில் உள்ளது.

இந்து, பௌத்தம் மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்த பலரும் இங்கு செல்லும் நிலையில் இந்த பயணம் மீண்டும் எப்போது துவங்கப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.