லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா ஊரடங்கால் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர்.இவர்களுடன் நடிகர் கதிரின் தந்தை லோகுவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது தொடர்பாக கதிர் தனது ட்விட்டர் பதிவில்


53 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் ‘மாஸ்டர்’ மூலம் அவர் நடிப்பதற்கான கனவு நனவாகியுள்ளது.
அது மிகவும் சிறிய காட்சியாக இருந்தாலும், அவருடைய வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளது என பதிவிட்டுள்ளார் .