கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு புதிய சிக்கல்..!

Must read

kadavul-irukan-kumaru-working-stills-4
ஜி.வி.பிரகாஷ் படம் என்றாலே இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் கிளு கிளுப்பான படமாக தான் இருக்கும் என்ற மனநிலை வந்துவிட்டது, ஆனால் அனைவரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு “கடவுள் இருக்கான் குமாரு” திரைப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு இது தான் ஜி.வியின் நடிப்பில் வெளியாகும் முதல் யூ சான்றிதழ் படமாகும்.
கடவுள் என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்த படத்துக்கு ஏகப்பட்ட பிரச்சனை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா சிலருக்கு பணம் தரவேண்டும் என்று கூறி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து படம் ரிலீஸை தடுத்தனர். அதன் பின் படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்த்த போது நம் நாட்டின் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் படத்தை தயாரிப்பாளரே தள்ளி வைத்தார்.
கடைசியாக வரும் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் என அறிவித்தனர் ஆனால் இந்த அறிவிப்புக்கும் ஆப்பு அடிக்கு வகையில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் தமிழர்களை கொச்சப்படுத்தும் படமாகவுள்ளதால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று “தமிழ் நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் சங்கம் என்ற அமைப்பு தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் “பல கட்சிகள் இருந்தாலும் முதலில் எந்த கட்சியிடம் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுவதுதான் தமிழர் பண்பாடு, கலாச்சரம்” என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. பணம் வாங்கி கொண்டு ஓட்டுப் போடுவது என்பது தமிழர்களின் கலாச்சாரம் என்பதை அந்த வசனம் குறிப்பிடுகிறது. இது உலகமெங்கும் வாழும் தமிழர்களை கொச்சைப்படுத்தி அவர்களின் கௌரவம், நேர்மையை சிதைப்பதாக உள்ளது. எனவே படத்தை தடை செய்வதோடு அதன் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article