ஆங்கிலப் படத்தின் காப்பியா ‘கடாரம் கொண்டாம்’…?

Must read

கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் மற்றும் டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ கடாரம் கொண்டான் ‘ . இது விக்ரமின் 56 வது திரைப்படமாகும்.

இந்தப் படத்தில், விக்ரமுடன் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடித்துள்ளார். ராஜேஷ் எம்.செல்வா இயக்கியிருக்கும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், அபி என இரண்டு இளம் நடிகர், நடிகை நடித்திருக்க, விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார்.

முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் ஆங்கில பட பாணியில் படமாக்கப்பட்டிருப்பதாகவு கூறப்படுகிறது.ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ‘கடாரம் கொண்டான்’ ஆங்கிலப் படம் ‘Point Blank’ ன் காப்பி தான் என்று தகவல் வெளியாகியுள்ளது . ஆனால், அப்படத்தின் உரிமையை பெற்று படமாக்கியிருக்கிறார்களா என்பது இன்னும் தெரியவில்லை .

More articles

Latest article